Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படுமா!

அக்டோபர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கை எதிர்வரும் வாரங்களில் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போது, பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க அரச சட்டத்தரணி கால அவகாசம் கேட்டமையினால் , வழக்கினை எதிர்வரும் 13ஆம் திகதி எடுத்து கொள்ள நீதவான் தவணையிட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன.

கட்டம் கட்டமாக 54 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, இது வரையில் 240 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 239 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்நிலையில் புதைகுழிக்கு அருகில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என ஸ்கான் அறிக்கை உள்ளிட்ட நிபுணத்துவ அறிக்கை ஊடாக சந்தேகிக்கப்படுவதால் , மேலும் 08 வார கால பகுதிக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்றிடம் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவம் விண்ணப்பம் செய்த நிலையில் , மன்று , அதற்கான செலவீனப்பதீட்டை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தது.

அந்நிலையில் , கடந்த வழக்கு தவணையின் போது மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் , அதற்கான அங்கீகார அறிக்கை இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள்!
அடுத்த செய்தி மன்னாரில் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக மன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய செயலியின் மூலம் புரட்சியை உருவாக்க Meta திட்டம்

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

மே 1, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பு

ஜூன் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?