Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

ஜூலை 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகின் அதிநவீன ஆறாம் தலைமுறை (Sixth-Generation) அதிநவீன போர் விமானங்களை வடிவமைத்து தயாரிக்கும் நோக்கில், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி முதலான நாடுகள் முன்னெடுத்துள்ள பில்லியன் டொலர் மதிப்பிலான ‘சர்வதேச கூட்டுப் போர் வான்வழித் திட்டத்தில்’ கனடா அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளது.

தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) அடுத்த வாரம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இத்திட்டத்தில் கனடா ‘அதிகாரப்பூர்வ கண்காணிப்பாளர்’ (Official Observer) நாடாக இணைவதை, உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவந்துள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள விசேட கையெழுத்து விழாவில், பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இணைந்து, தேசிய பாதுகாப்பு அமைச்சர் மெக்கின்டி இந்த உடன்படிக்கையை அங்கீகரிக்கவுள்ளார்.

இந்த ‘சர்வதேச கூட்டுப் போர் வான்வழித் திட்டத்தில்’ இணைவதன் மூலம், கனடா உடனடியாக எந்தவொரு நிதி முதலீடுகளையோ அல்லது கொள்கை ரீதியான கடப்பாடுகளையோ ஏற்க வேண்டியதில்லை என்ற நிலை காணப்படுகின்றது.

எனினும், ஒரு கண்காணிப்பாளர் நாடாக நுழைவதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே அதிநவீன வான் பாதுகாப்புத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை உற்றுநோக்கவும், எதிர்காலத்தில் கனேடிய தொழில்நுட்பங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக அமையுமென கனேடிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கனடா எங்கு இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்துச் செயல்படுவதற்கு இதுவொரு மிகச்சிறந்த உத்தியோகபூர்வ நகர்வாகும் என, கனேடிய வான் பாதுகாப்பு பிரிவின் (NORAD) முன்னாள் தளபதி கிறிஸ்டோபர் கோட்ஸ் (Christopher Coates) தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!
அடுத்த செய்தி மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அனைத்து சபையிலும் வெல்வோம் – சித்தார்த்தன்…

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

ஆகஸ்ட் 7, 2026
கனடாவிசேட செய்திகள்

கனடா மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என தகவல்!

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சர்வதேச சட்ட மாநாடு ஆரம்பம்

ஜனவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?