Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

மார்ச் 17, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாககூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.

ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது

வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன

அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும்.

டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும்.

அண்மையில் செங்கல பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஒரு பிரபல ஆலையத்தை தொடர்பு கொண்டு ஆலைய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை

அதே நேரத்தில் அந்த ஆலைய மதகுரு உட்பட ஆலைய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம். இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது

எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம் எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம் வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார்.

முந்தைய செய்தி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து
அடுத்த செய்தி எரிபொருளைச் சேமிக்க புதிய கியூ ஆர் முறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை பகுதியில் பணத்தை திருடும் காகம்!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள் – ஒரு யானை உயிரிழப்பு

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?