Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

ஆகஸ்ட் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசப்பிள்ளை வேந்தன் மற்றும் எம். குணசேகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் ஆஜர் ஆகுமாறு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்டுள்ள மன்று , அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டுள்ளது.

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அன்றைய தினம் போராட்ட வடிவத்தை மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து , கறுப்பு மேலங்கி அணிந்து , கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து , பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி , கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு சில மணி நேரம் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பலாலி சந்தி பகுதிக்கு சென்று மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தினால், வீதியில் பயணித்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறியே பலாலி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முந்தைய செய்தி  அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு
அடுத்த செய்தி யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பாகிஸ்தானின் 3 இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

மே 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க அரசில் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு எதிராக இடைக்காலத் தடை நீடிப்பு!

பிப்ரவரி 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

விரைவில் புதிய அம்சங்களுடன் சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?