Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஐரோப்பிய நாடுகளை கூட்டி வந்து கடலை கூறுபோட்டு விற்கப்போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – நா.வர்ணகுலசிங்கம்

ஜனவரி 12, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

வெளிநாட்டு பிரஜைகள் சிலர் தொண்டைமானாறு கடற்கரையில் நின்று ரோன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள், அதே போல் முல்லைத்தீவில் றோகிஞ்சியா படகு கரையொதுங்கும் வரை கடற்படைக்குத் தெரியாது போயுள்ளது. இவ்வாறு வெளிநாட்டவர் எமது கடலில் என்ன செய்கிறார்கள் என்று அவதானிக்க முடியாதவர்கள் பிறகு கிளீன் சிறீலங்கா பற்றிப் பேசி பிரியோசனமில்லை.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் வடமராட்சி வடக்கு சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

புதிய கடற்றொழில் அமைச்சர் ஐரோப்பிய நாடுகளுடன் பேச வேண்டும் என்றுள்ளார். இது வரை எந்த அமைச்சரும் பேசியதில்லை இது எமக்கு சந்தேகந்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை கூட்டி வந்து கடலை கூறுபோட்டு விற்கப்போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளை அழைத்து எமது கடல் வளத்தை விற்கப்போகிறீர்களா?

இது தொடர்பில் எமது கடற்றொழில் அமைப்புக்கள் மெளனமாக உள்ளது பேரபத்தானது. அமைச்சரின் குறித்த விடயம் பற்றி பேச வேண்டும்.

கிளீன் சிறிலங்கா என்று ஒன்றைத் தொடங்கியுள்ளீர்கள் இதில் என்ன நடக்கிறது? எமது நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தி சட்டத்தை நிரூபியுங்கள். இது தான் கிளீன் சிறிலங்கா அதைவிடுத்து சுற்றுநிரூபங்களை விடுவது மட்டுமே நடைமுறையில் கொண்டு வருவதில்லை. சட்டத்தையும் சுற்றுநிரூபங்களையும் நடைமுறைப்படுத்துங்கள் எல்லாம் கிளீனாகும்.

பாராளுமன்றில் து.ரவிகரன் மீனவர்கள் சார்பில் இந்திய மீனவர்களினால் ஏற்படும் பிரசினை பற்றி பேசியுள்ளார் அதை வரவேற்கிறோம், பேச்சோடு நின்று விடாமல் தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். பல தமிழ் அரசியல் கட்சிகளிடமும் பாராளுமன்ற பிரதி நிதிகளிடமும் பல் ஆவணங்களைக் கையளித்தோம் ஒன்றும் நடக்கவில்லை. தமிழ் அரசியல் வாதிகள் துப்புக்கெட்டவர்கள்.

கடற்றொழில் தொடர்பில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அதை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் பாராளுமன்றில் குரல் எழுப்புங்கள். அடுத்து தைப்பொங்கள் வருகிறது நாம் கடலுக்குள் செல்ல முடியாத நிலையுள்ளது. இந்திய மீனவர்களது றோளர்ப் படகுகள் எமது கடலில் வளங்களை அள்ளி எமது கடல் வளம் நாசமாகிறது.

இப்போது வந்த அரசும் அமைச்சரும் நல்ல விடயங்களைப் பேசுவார்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்களும் கதையளவிலேயே உள்ளது. ஐரோப்பாவுடன் பேசப்போராராம் அமைச்சர்.

எமது கடற்பரப்பில் இடம்பெறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இங்கிருக்கும் உள்ளூர்ச் சங்கங்கள் ஏன் வெளி மாவட்ட மீனவர்களுக்கு ஒரு நடமுறையையும் உள்ளூர் மீனவர்களுக்கு ஒரு நடைமுறையும் கொண்டுள்ளீர்கள்.

வெளி மாவட்ட மீனவர்களுக்கு உள்ளூரில் அனுமதியை வழங்குவதால் கஞ்சா கடத்தல் உட்பட போர்க்காலத்தில் கடலில் தாண்டு போயுள்ள கடற்படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் படகுகளின் பாகங்களை திருடிச் செல்ல வழி திறந்து விடப்பட்டுள்ளது.

கடல்வளம் வெளி மாவட்ட மீனவர்கள், சட்ட விரோத தொழில் முறைகள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களால் கடல்வளம் அழிக்கப்படுகிறது நாசம்செய்யப்படுகிறது. கடல்ப் பகுதிகளில் பிளாஸ்ரிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கடல்வளம் நாசமாகப்பட்டுள்ளது. இதைக் கிளீன் செய்யுங்கள் கிளீன் சிறிலங்கா என்றால் இதைக் கிளீன் செய்யுங்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டு பிரஜைகள் சிலர் தொண்டைமானாறு கடற்கரையில் நின்று ரோன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள், அதே போல் முல்லைத்தீவில் றோகிஞ்சியா படகு கரையொதுங்கும் வரை கடற்படைக்குத் தெரியாது போயுள்ளது. இவ்வாறு வெளிநாட்டவர் எமது கடலில் என்ன செய்கிறார்கள் என்று அவதானிக்க முடியாதவர்கள் பிறகு கிளீன் சிறீலங்கா பற்றிப் பேசி பிரியோசனமில்லை என்று தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்!
அடுத்த செய்தி இந்த ஆண்டு 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அம்பலகந்த வீதி வெடிப்பு

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 14 வயது சிறுவனை சித்திரவதை செய்த ஒருவர் கைது

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பருத்தித்துறையில் தடம்புரண்ட கனரக வாகனம்!

ஜூலை 5, 2025
இலங்கை

கட்டளை தளபதியுடன் சந்திப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?