Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் – இரத்தினம் பத்மநாதன்

அக்டோபர் 24, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாகாண மீனவர் தொழிற் சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வெய்ஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவருமான இரத்தினம் பத்மநாதன்,பாலமீன்மடு திராய்மடு மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயந்தீஸ் ரூபசேன கலந்து கொண்டு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் மீன்பிடி அமைச்சராக இருந்த ராஜிதசேனாரத்தின மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் கல்லாறு, காத்தான்குடி, பாலமீன்மடு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் மீனவர்களின் வளர்ச்சிக்காக ஒரு மண்ணெண்ணைய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்து அந்த பகுதி மீனவ சங்கங்களிடம் கையளித்தார்.

இவ்வாறு அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மட்டும் இயங்கி கொண்டிருக்கின்றதுடன் கல்லாறு, காத்தான்குடி ஆகிய இரண்டும் இயங்காமல் பழுதடைந்து துரிப்படித்து பாழடைந்து கிடக்கிறது.

இந்த நிலையில் பாலமீன்மடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அந்த பகுதியில் உள்ள வில் 300 படகுகளுக்கு மேற்பட்ட படகுகள் பயன்பெற்று வருகின்றது. அதேபோல் களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அந்த பகுதி படகுகளை சேர்ந்த மீனவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

நான் தலைவராக இருந்தபோது தான் தரப்பட்டது இதனை நாங்கள் தனிநபர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் வருவாயில் மீனவர் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் மரண செலவுக்கு பணம் வழங்கி வருகின்றோம் அதுமட்டுமல்ல பாடசாலை மற்றும் விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக் காக பணம் வழங்கி வருகின்றோம்.

பாலமீன்மடு ஒரு பெரிய கிராமம் அங்கு ஒரு மாதத்தில் 3 மரணச் சம்பவங் இடம்பெறுகின்றது ஒரு மரணசசடங்கிற்கு 10 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் மீனவர் சங்கத்துக்கு வருவாயாக வரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலை செய்துவரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மத்திய அரசில் இருந்து வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்கள் கையில் இருந்து பறிபோகுமாக இருந்தால் நாங்கள் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல வடக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்.

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ!

அக்டோபர் 2, 2025
இலங்கை

ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் -டானியல் வசந்தன் தெரிவித்தார்!

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உக்ரைனுக்காக பணியாற்றியவர்களுக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை விதிப்பு!

நவம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?