Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

“சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்துகொண்டார்!

ஆகஸ்ட் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சி இன்று பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது.

இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒன்றாக – கைவிடாத” என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள் திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக “சித் ரூ” கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. 06 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்காக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 632 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

“சித் ரூ-2025” மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார்.

பிள்ளைகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் புகைப்படம் ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனீ கருணாரத்ன மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி கஹவத்தை கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம்!
அடுத்த செய்தி உத்தரகண்ட் மாநிலத்தில் மண்சரிவு -நால்வர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் என்புகள் மீட்பு

ஜூன் 10, 2026
இலங்கை

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு- தேசபந்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?