தெலுங்கில் ஹனுமா ரெட்டி யக்கண்டியின் இயக்கத்தில் மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டேவிட் ரெட்டி.
இந்த படத்தில் மரியா ரியா போஷாப்கா கதாநாயகியாக நடிப்பதுடன், நடிகை ரம்யா கிருஷ்ணனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
படக்குழுவினர் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திர பெயரை வெளியிட்டுள்ளனர். இதில் கமலா ரெட்டியாக நடிப்பதுடன், பாகுபலி திரைப்பட ராஜமாதா தோற்றத்தில் கம்பீர தோரணையுடன் உள்ளார்.

