இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தான் தக் லைஃப் திரைப்படம் .
38 வருடங்களுக்கு பிறகு அதாவது, நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ,நடிகர் கமல் ஹாசன் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகியதால், இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.
மேலும் இத்திரைப்படத்தில் த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பல திரை நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி நேற்றைய தினம் திரையரங்கில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
இத்திரைப்படம் ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகி உலகளவில் முதல் நாள் ரூபாய் . 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் இத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
