Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வில் மேரி நகர நகைக்கடை கொள்ளை – ஐவர் மீது குற்றச்சாட்டு பதிவு

செப்டம்பர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பெருநகரப் பகுதியிலுள்ள வில்-மேரி (Ville-Marie) நகரில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் கண்ணாடிகளை உடைத்து துணிச்சலாக கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தற்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆம் திகதி நண்பகல் 12:30 மணியளவில், கிளார்க் வீதி மற்றும் விஜர் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த கண்ணாடிக் கதவுகள் மற்றும் நகைக் காட்சிப் பேழைகளைக்  கைக்கருவிகளால் அடித்து நொறுக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

இச்சம்பவத்தின் போது கடையிலிருந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி  தப்பியுள்ளார்.

கொள்ளைச் சம்பவம் நடந்து அரை மணி நேரத்திற்குள், மொன்றியல் பொலிஸார் (SPVM) விரைந்து செயற்பட்டு ‘செயின்ட்-லோரண்ட்’ (Saint-Laurent) பகுதியில் வைத்து ஐந்து சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

அத்துடன் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வயது வந்தவர்களான ஜேசன் கிளெர்வோ, ரோல்டி ஃபெனலன்-ஜீன்  ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீது கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைதல், ஆயுதமேந்திய கொள்ளை, திருட்டுக்கான  கருவிகளை வைத்திருத்தல், குற்றவியல் நோக்கத்திற்காக முகமூடி அணிதல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஜேசன் கிளெர்வோ மீது களவாடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் மேலதிகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய 16 வயதான இருவர் மற்றும் 17 வயதான ஒருவர் உட்பட மூன்று சிறுவர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் மீதும்  இதேபோன்ற  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மொன்றியல் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இதேபோன்ற தொடர் நகைக்கடை கொள்ளைச் சம்பவங்களுடன் இந்த நபர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து மொன்றியல் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
அடுத்த செய்தி அலெக்சாண்டர் வட்டமானு சலாமன்கா கொலையை ஒப்புக்கொண்ட எரோ சவாடோகோ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சடலம் மீட்பு !

மார்ச் 22, 2025
கியூபெக்

நார்த் யோர்க்கில் நிகழ்ந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பாடசாலையில் குழப்பம்: 78 மாணவர்கள் இடைநீக்கம்!

அக்டோபர் 22, 2026
கனடாமுதன்மை செய்தி

கேரி ஆனந்தசங்கரியிடம் தீவிர விசாரணை

அக்டோபர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?