Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கேரி ஆனந்தசங்கரியிடம் தீவிர விசாரணை

அக்டோபர் 25, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் அரசாங்க அதிகாரிகளிடம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது   எவ்வாறாயினும், அமைச்சரின் பேச்சாளர், தமது அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி பதவிக்கு வருவதற்கு முன்னர், அவரது தொகுதி அலுவலகம் ரஜினி இராஜமனோகரன் என்பவரின் குடிவரவு வழக்கில், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மூன்று முறை குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை தொடர்பான கனேடிய IRCC அதிகாரிகளிடம் நிலை குறித்து விசாரித்துள்ளது.

முன்னதாக, ரஜினி இராஜமனோகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு “உறுப்பினர்” என்ற அடிப்படையில் கனடாவுக்குள் நுழைய தகுதியற்றவர் என எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனினும் ரஜினி இராஜமனோகரன், தான் கட்டாயப்படுத்தப்பட்டு முகாமில் சமையல் வேலை பார்த்ததாகவும், காயமடைந்த போராளிகளுக்கு உதவிகள் செய்ததாகவும், தீவிரவாதத்துடன் தனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றும்  தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து , இந்த வழக்கின் சமீபத்திய தீர்ப்பில், கூட்டாட்சி நீதிமன்றம் குடிவரவு அதிகாரியின் முடிவை உறுதிசெய்து, இராஜமனோகரன் கனடாவுக்குள் குடியேறும் முயற்சியை நிராகரித்தது.

இதன் பின்னரே அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியுடன் தொடர்புடைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு, விடுதலைப் புலிகளின் “உறுப்பினர்” எனக் கருதப்பட்ட செந்தூரன் செல்வக்குமரன் என்பவரின் குடிவரவு விண்ணப்பத்தை அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் கடிதங்கள் எழுதியதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது இரண்டாவது முறையாகவும் ரஜினி இராஜமனோகரன் விவகாரத்தில் இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி இராஜமனோகரனின் வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், “விண்ணப்பங்களின் நிலை குறித்து அறியும் வழக்கமான பணிகள்” என்றும், அமைச்சரின் அலுவலகம் எந்தவிதமான ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராஜமனோகரன் அமைச்சரின் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கேரி ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் மற்றும் உலகத் தமிழர் இயக்கம் (World Tamil Movement) தொடர்பான முடிவுகளில் இருந்து தன்னைப் பொறுப்பு விலக்கிக் கொண்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இந்தியாவின் மகாராஷ்டிராவில் நில அதிர்வு
அடுத்த செய்தி கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் வரிகளால் பொருட்களின் விலை அதிகரிக்கும் – பெர் பேங்க் தெரிவிப்பு!

மே 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்றாரியோவில் முன்னெடுக்கப்படவுள்ள சோதனை

நவம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மார்ச் 9, 2025
கனடா

பில்லி பிஷப் தீவு விமான நிலைய விரிவாக்க விவகாரம்

மே 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?