Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பார்ட்டி கியூபெக்குவா கட்சியை கடுமையாக சாடும் கிறிஸ்டின் பிரெஷெட்

செப்டம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் ‘பார்ட்டி கியூபெக்குவா‘ (PQ) கட்சி ஆட்சிக்கு வந்தால்  நடத்தத்  திட்டமிட்டுள்ள தனிநாடு கோரும் பொதுவாக்கெடுப்புச் செலவுகள் குறித்து வெளியிட்ட  அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்சியை கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனிநாடாவதற்கான முதல் ஆண்டின் நிதியியல் திட்டத்தை வெளியிடத் தவறியதன் மூலம் ‘பார்ட்டி கியூபெக்குவா‘ கட்சி வாக்காளர்களை ஏமாற்றுவதாக, அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பார்ட்டி கியூபெக்குவா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon), தங்களது கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றால் 2029 அல்லது 2030 ஆம் ஆண்டில் தனிநாடு கோரும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியே, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) பார்ட்டி கியூபெக்குவா கட்சி மீது தமது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

”வாக்கெடுப்பு நடத்துவதற்கு 130 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று கூறும் பார்ட்டி கியூபெக்குவா, தனிநாடாகக் கியூபெக் இயங்கும் முதல் ஆண்டில் ஏற்படவுள்ள பொருளாதாரச் சுமைகள் மற்றும் நிதியியல் திட்டங்கள் குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறது” என்று, கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

”கியூபெக் மக்களின் வரிப்பணமான 130 மில்லியன் டொலர்களை இதுபோன்ற   வாக்கெடுப்புகளுக்குப் வீணாக்குவதற்குப் பதிலாக, மக்கள் நலச் சேவைகளில் முதலீடு செய்ய முடியும்” என்று, அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜூன் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த கியூபெக் மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஜூலை 18, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்!

ஆகஸ்ட் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை – பாத்வேஸ் அலையன்ஸ்

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?