Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டாட்சி அமைப்புக்குள் கியூபெக்கின் உரிமைகளைப் பாதுகாப்பது லிபரல் மட்டுமே – சார்லஸ் மிலியார்ட்

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலில், மத்திய ஆட்சிக்கு உட்பட்டு கியூபெக் மாகாணத்தின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரே அரசியல் சக்தி லிபரல் கட்சி மட்டுமே என, கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவர் சார்லஸ் மிலியார்ட் (Charles Milliard) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், மொன்றியலில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

கியூபெக் மாகாணத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) கட்சி, கியூபெக்கை கனடாவில் இருந்து பிரித்துத் தனிநாடாக அறிவிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டிய மிலியார்ட், மறுபுறம் ஆளும்கட்சியான ‘கோலிஷான் அவெனீர் கியூபெக்’ (CAQ) கட்சி மாகாணத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோற்றுவிட்டதாகச் சாடினார்.

“கனடிய கூட்டாட்சி அமைப்பிற்குள் இருந்துகொண்டே கியூபெக்கின் மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதார நலன்களைப் பலமாகப் பாதுகாக்க முடியும் என்ற உறுதியான கூட்டாட்சி தேசியவாத (Federalist Nationalism) கொள்கையைக் கொண்டுள்ள ஒரே கட்சி லிபரல் மட்டுமே” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பார்ட்டி கியூபெக்வா (PQ) ஆட்சிக்கு வந்தால் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தூண்டி பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும் என எச்சரித்த மிலியார்ட், கியூபெக் மக்கள் மீண்டும் ஒரு வாக்கெடுப்பு (Referendum) அல்லது அரசியல் நிலையற்ற தன்மையை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்

முந்தைய செய்தி பிரெஞ்சு மொழிக்கு முன்னுரிமை -கியூபெக் தேர்தல் ஆவணங்களில் புதிய மாற்றம்
அடுத்த செய்தி கியூபெக் இடைத்தேர்தல் – கன்சர்வேடிவ் வசமிருந்த முக்கிய தொகுதி லிபரலிடம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனேடியர்கள் மெக்சிகோவிற்கான பயணத்தைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
கியூபெக்

மொன்றியலில் காலவரையறையின்றி மூடப்படும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள்

ஏப்ரல் 9, 2026
கியூபெக்

நுனாவிக் பிராந்திய சம்பவம் குறித்து கியூபெக் கண்காணிப்பு அமைப்பு உயர்மட்ட விசாரணை

பிப்ரவரி 9, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்காண பயண ஆலோசனை புதுப்பித்தது அரசு!

ஏப்ரல் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?