கர்நாடக இசை உலகின் புகழ்பெற்ற ஆளுமையும் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு பிரம்மாண்டமான முறையில் திரைப்படமாக உருவாகவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘ஜெர்சி’ படத்தை இயக்கிப் புகழ்பெற்ற கௌதம் தின்னனுரி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
அல்லு அரவிந்த், பன்னி வாஸ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், எம்.எஸ். சுப்புலட்சுமியின் சிறுவயது இசைப் பயணம் தொடங்கி சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகியாக வளர்ந்த சாதனைகளை விரிவாகப் பதிவு செய்யவுள்ளது.
இக்கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சாய் பல்லவி முதன்மைத் தேர்வாக இருந்தார்.
ஆனால் பிற படங்களின் படப்பிடிப்பு அட்டவணை காரணமாக அவர் விலகியதால், ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தலைப்பு மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படவுள்ளன.

