Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

விமர்சனங்களை முறியடித்து ‘டாக்சிக்’ வசூல் வேட்டை!

ஆகஸ்ட் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கே.ஜி.எஃப் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான ‘டாக்சிக்’ திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த கேங்ஸ்டர் அதிரடித் திரைப்படத்திற்கு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யஷ் திரைக்கு திரும்பியுள்ளதால் திரையுலகிலும் ரசிகர்களிடையேயும் முன்கூட்டியே மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

திரையரங்குகளில் திரைப்படம் வெளியான பிறகு, கதையின் தெளிவின்மை மற்றும் இரண்டாம் பாதியில் எல்லைமீறிய வன்முறைக் காட்சிகள் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், யஷின் கம்பீரமான நடிப்பு, பிரம்மாண்டமான பின்னணி இசை மற்றும் அதிரடியான மாஸ் காட்சிகள் ரசிகர்களைக் பெருமளவில் கவர்ந்து, முதல் நாளிலேயே திரையரங்கு அரங்குகளை நிரப்பச் செய்துள்ளது.

திரையரங்கு வசூலில் இந்த எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.60 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

முன் பதிவு மற்றும் முதல் நாள் காட்சிகளின் மூலம் பல கோடி வசூலித்து, இந்தி பதிப்பு உட்பட பல மொழிகளில் முன்னணிப் படங்களின் ஆரம்ப நாள் வசூல் வேகத்தைச் மிஞ்சியுள்ளது.

குறிப்பாக இந்தி மற்றும் கன்னட மொழிகளில் அதிக அளவிலான வசூலை ஈட்டியுள்ள இப்படம், கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விடியற்காலை காட்சிகளிலேயே 80 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி சாதனை படைத்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் வாரத்தின் நடுப்பகுதியில் வெளியானதால், தொடர்ந்து வரவிருக்கும் வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்கள் இதன் வசூலை பல மடங்கு அதிகரிக்கும் என திரைத்துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

முதல் நாளின் முடிவிலேயே உலகம் முழுவதிலும் இருந்து இப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’: டிரெய்லர் வெளியீடு
அடுத்த செய்தி ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

யுவன் இசையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியீடு!

ஆகஸ்ட் 9, 2026
சினிமா

வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜுடன் துணைநிற்பேன்” – தந்தை பொறுப்பை ஏற்ற மாதம்பட்டி ரங்கராஜ்

ஜூலை 30, 2026
இந்தியாசினிமா

விஜய்யுடன் மோதும் பிரபாஸ் 💥🔥 மேலும் பல சினிமா Updates உடன் Travel With Cinema

ஜூலை 31, 2025
சினிமா

கூலி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு !

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?