தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருப்பவர் சாய் அபியங்கர். இவர் பல ஆல்பம் பாடல்களை தந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அடுத்ததாக ஒரு பாடலை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வருகின்ற மார்ச் 5 ஆம் திகதி “பவள மல்லி” என்ற பாடலை வெளியிடவுள்ளார். இப்பாடலை சாய் அபியங்கர் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதோடு, பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார்.
