கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான விசாரணைகளில், அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என கொழும்பு குற்றப் பிரிவு இன்று கொழும்பு பிரதான நீதிவானிடம் தெரிவித்துள்ளது.
குறித்த கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

