நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி, பொலிஸ் உயர் அதிகாரிகள உள்ளிட்ட தரப்பினர் நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட சிறைச்சாலை பாதுகாப்பு பொறுப்பதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியுள்ளனர்.


