Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

ஆகஸ்ட் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திபெத் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இமாலய மலையுச்சியில் ஏற்பட்ட திடீர் பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக எல்ஹெண்டே ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் அது உடைப்பெடுத்து பிரம்மாண்ட வெள்ளமாக மாறியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.

இந்த வெள்ள நீர் காலை 9 மணி அளவில் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் சீறிப் பாய்ந்து டிமுரே, சியாப்ரு பெசி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை முழுமையாக அடித்துச் சென்றது.

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழியாததால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அவகாசம் கிடைக்காமல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேரழிவால் ரசுவா, நுவாகோட், தாடிங், சித்வான் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்மின் நிலைய உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சுமார் 85 பாதுகாப்புப் படை வீரர்கள், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் மின் திட்டப் பணியாளர்கள் இதுவரை தொடர்பில் வரவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நேபாள பிரதமர் பாலன் ஷா அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் காவல்துறையினர் களமிறக்கப்பட்டு, ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
அடுத்த செய்தி ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள் ; லெபனானில் எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் அச்சம்!

செப்டம்பர் 19, 2024
உலகம்

9ஆம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி.

டிசம்பர் 20, 2024
உலகம்

கம்போடிய எல்லையில் மீண்டும் தாக்குதல்!

டிசம்பர் 15, 2025
உலகம்

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது!

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?