லெபனானில் நேற்று முன்தினம் (17-09-2024) ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தும், 2,800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் முடிந்த அடுத்த நாளே லெபனானில் ஒரே நேரத்தில் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்தாகவும், 450 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.