அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்த முயற்சிகளை நிராகரித்து, தாய்லாந்து இராணுவம் கம்போடியாவிற்கு எதிராக இறையாண்மை பிரதேசத்தை மீட்டெடுப்பதற்கான புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
கம்போடியா அதன் அனைத்து எல்லைக் கடவைகளையும் மூடியதைத் தொடர்ந்து டிராட் மாகாணத்தின் எல்லை பிரதேசங்களை மீட்டெடுக்க இந்த இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததாக ரோயல் தாய் கடற்படை பேச்சாளர் ரியர் அட்மிரல் பராச் ரத்தனசய்யப்பன் கூறியுள்ளார்.
800 கிலோ மீற்றர் எல்லையை நிர்ணயிப்பது தொடர்பான நீண்டகால சர்ச்சையில் இருந்து இம்மோதல் நிலை ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பு மோதல்களில் சுமார் 25 வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர், அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.


