Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி

ஆகஸ்ட் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட உடன்படிக்கையின் “முழு விவரங்களையும்” பகிரங்கமாக வெளியிடுமாறு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்கிற்கு (Dominic LeBlanc) கன்சர்வேடிவ் கட்சியின் கனடா-அமெரிக்க உறவுகளுக்கான நிழல் அமைச்சர் சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் இரகசியங்களை தாங்கள் கோரவில்லை என்றும், மாறாக ஒட்டாவாவும் வொஷிங்டனும் ஏற்கனவே அறிந்துள்ள உடன்படிக்கை விவரங்களையே கோருவதாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நடவடிக்கை, நாட்டின் எதிர்காலப் பாதை குறித்துக் கனடிய மக்கள் சுதந்திரமாக விவாதிக்க உதவும் என மஜும்தார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனடாவைத் தொழில்மயமாக்கலில் இருந்து பின்னுக்குத் தள்ளும் ஒருதலைப்பட்சமான சுங்கவரிகளையோ அல்லது நாட்டின் நலனுக்கு எதிரான மோசமான உடன்படிக்கையையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre) உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒருமித்த கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா
அடுத்த செய்தி சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா நியமனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜூன் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

“தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் திட்டம்

செப்டம்பர் 11, 2025
கனடா

கனடா குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மார்ச் 9, 2026
கனடா

”கனடாவுக்கே முதன்மை” எனும் பேரணியை முன்னெடுக்கின்றது கன்சர்வேட்டிவ் கட்சி!

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?