மொண்ட்ரியல் நகரில் 2025ஆம் ஆண்டு பொலிஸ் கைது நடவடிக்கையின் போது 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், பொலிஸார் பயன்படுத்திய கை மற்றும் கால்களைப் பின்னால் கட்டிப்போடும் ‘ஹாக்-டை’ (hog-tie) முறைமையே அவரது இறப்பிற்கு முக்கியக் காரணம் எனக் மரண விசாரணை அதிகாரி (Coroner) தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாண மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமேல் (Géhane Kamel) வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், குறித்த ஆபத்தான கைது நடைமுறையை மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உடனடியாக முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மன உளைச்சலில் உள்ளவர்களைக் கையாளும் போது பொலிஸ் அதிகாரிகள் உடற்பொருத்து கேமராக்களை (Body-worn cameras) அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

