கியூபெக் மாகாணத்தில் வீடற்ற நிலையில் வாழும் மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 180 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஷெர்புரூக் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2020ஆம் ஆண்டில் வீடற்ற நிலையில் வாழ்ந்த 45 பேர் உயிரிழந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்பு, வீடற்ற மக்களுக்கான பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

