Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்றது.

இதன்படி வெள்ளத்தை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்தார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும்
பணிப்புரை வழங்கினார்.

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம், திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள், நகர சபைகளின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலை போராட்டம்(Video)

பிப்ரவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி

பிப்ரவரி 9, 2026
இலங்கை

யாழில் மினி சூறாவளி 222 பேர் பாதிப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வவுனியாவில் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகம் மற்றும் தடுப்பு பிரிவு திறந்து வைப்பு

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?