Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஆகஸ்ட் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்குப் பயணத்தைத் தொடங்கிய படகு ஒன்று நடுக்கடலில் பழுதானதால், 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றித் தத்தளித்து 17 அகதிகள் உயிரிழந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி, தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகையும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள் ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்த நிலையில், எல்லை கடக்கும் முயற்சியில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

முந்தைய செய்தி என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்
அடுத்த செய்தி ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 6, 2026
உலகம்

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு!

டிசம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

ஏப்ரல் 27, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பு…

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?