2026 ஆம் ஆண்டில் 13 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 26,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் 6013 நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 5662 நோயாளர்களும், மே 04 ஆம் திகதி வரை 809 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை , மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
