Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பீகார் மாநிலத்தில் காலியாக இருந்த பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், ஜன் சுராஜ்  கட்சியின் தலைவரும் அரசியல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

ஜன் சுராஜ் கட்சி தொடங்கிய பிறகு அது சந்திக்கும் முதல் தேர்தல் வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பங்கிப்பூர் இடைத்தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பங்கிப்பூர் தொகுதி மக்களுக்கும் பீகார் மாநில மக்களுக்கும் அவர் ஆற்றும் நற்பணிகளில் தொடர் வெற்றிபெற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் கிஷோர், தான் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதால் மட்டுமே பங்கிபூர் உடனடியாக பெங்களூருவாக மாறிவிடாது என்றும், ஆனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண முடியும் என்றும் கூறினார். மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி, பங்கிபூர் தொகுதியை மேம்படுத்துவதே தனது முதன்மையான பணியாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தத் தேர்தல் வெறும் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்கானது மட்டுமல்ல என்றும், பீகார் மாநிலத்தை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்கான செய்தி என்றும் சுட்டிக்காட்டினார்.

பீகார் மாநிலம் முன்னேறவும், மக்கள் தங்களைப் பீகாரிகள் என்று பெருமையோடு கூறிக்கொள்ளவும் தகுதியும் நல்ல குணநலன்களும் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு பங்கிபூர் மக்கள் வலுவான செய்தியை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மேகதாதுவில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு!
அடுத்த செய்தி இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

ஜூன் 6, 2025
இந்தியாவிசேட செய்திகள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!

ஏப்ரல் 22, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி இடம்பிடித்தார்

பிப்ரவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?