தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,069 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இந்த இரு நிலநடுக்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.
7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் சில விநாடிகள் இடைவெளியில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகள் மற்றும் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் 5,069 பேர் உயிரிழப்பு ,16,740 பேர் காயம் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்
நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் முற்றாக இடிந்து விழுந்துள்ளன சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன
மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அதிகாரிகள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ந்து ஏற்பட்ட பிந்தைய அதிர்வுகளும் (Aftershocks) மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பேரழிவை எதிர்கொள்ள வெனிசுலாவுக்கு சர்வதேச உதவிகளும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. மீள்கட்டமைப்பு மற்றும் அவசர உதவிகளுக்காக நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.



