யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர், நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09 மணிக்கு செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திங்கட்கிழமை நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09 மணிக்கு புதைகுழி பகுதியை பார்வையிடவுள்ளனர்.



