கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
220 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக களனி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றுக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (28) புறக்கோட்டையில் உள்ள சில்லறை வர்த்தகர் ஒருவருக்கு 7.5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.