கடந்த காலங்களில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்த விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சஜின் வாஸ் குணவர்த்தன எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரைக் காலமும் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இவர் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
