அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர், கனடாவுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் “51வது மாநிலம்” எனக் குறிப்பிட்ட கருத்துக்கள் இருநாடுகளுக்கிடையேயான உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இதன் பின்னணியில், கனடா தனது “ஆற்றல் இறையாண்மை” (Energy Sovereignty) என்ற கொள்கையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. கனடிய எண்ணெயின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக இருந்த அமெரிக்கா, சமீபகாலமாக அதிகரித்து வரும் அரசியல் மற்றும் வர்த்தக நிலையற்ற தன்மையால் நம்பகமற்ற கூட்டாளியாக மாறிவருவதாக கனடிய தலைவர்கள் கருதுகின்றனர்.
இதனால், கனடா தற்போது ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட புதிய சர்வதேச சந்தைகளை நோக்கி தனது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அமெரிக்க சந்தி மீது இருக்கும் அதிக சார்பை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியல் ஆய்வாளர்கள் கருத்துப்படி, இந்த புதிய சூழ்நிலை வட அமெரிக்க வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
