அமெரிக்கா கனடிய பொருட்களில் சுமார் 20 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில், கனடாவும் பதிலடி வரிகளை அறிவித்துள்ளது. இந்த வர்த்தக மோதல் கனடாவின் உற்பத்தி, வாகனத் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றத்தைத் தொடர்ந்து, கனடா தனது எண்ணெய் ஏற்றுமதிக்கான சந்தைகளைப் பல்வகைப்படுத்தும் நோக்கில் மேற்கு கடற்கரை நோக்கிய புதிய எண்ணெய்க் குழாய் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக Trans Mountain நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவின் எண்ணெய் ஏற்றுமதிகளில் சுமார் 90% தற்போது அமெரிக்காவையே சார்ந்துள்ளது.
அதேவேளை, கனடா பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3.3% வருடாந்திர விகிதத்தில் வளர்ச்சி பெற்றுள்ளதாக Statistics Canada தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவுடனான புதிய வர்த்தக மோதல் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

