வரவிருக்கும் குளிர்காலத்திற்கான தனது புதிய விமானப் பயண அட்டவணையை எயார் கனடா (Air Canada) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மொன்றியல் நகரில் இருந்து அமெரிக்காவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த எல்லைகடந்த (Transborder) விமானச் சேவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எயார் கனடா நிறுவனம், மொன்றியால் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து (YUL) அமெரிக்காவிற்குச் செல்லும் பயணிகளுக்கான குளிர்காலப் பறப்புத் திட்டத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அண்மைய அரசியல் நகர்வுகள் மற்றும் எல்லையோரக் கெடுபிடிகள் காரணமாக, கனேடியர்களிடையே அமெரிக்காவுக்கான பயணக் கேள்வி (Travel Demand) வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனைச் சமாளிக்கும் நோக்கில், மொன்றியாலிலிருந்து அமெரிக்க நகரங்களுக்கான விமானச் சேவைகளின் அளவை எயார் கனடா நிறுவனம் குறைத்துள்ளது.
மொன்றியாலிலிருந்து அமெரிக்காவின் சியாட்டில் (Seattle/Tacoma) நகருக்கான நேரடி இடைநில்லா விமானச் சேவைகளை எயார் கனடா தற்காலிகமாகப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

