Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ விவகாரம்! – விசாரணையைத் தீவிரப்படுத்தியது BEI புலனாய்வு அமைப்பு!

ஜூலை 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த, துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கியூபெக் மாகாணத்தின் சுயாதீன பொலீஸ் கண்காணிப்பு அமைப்பான BEI தீவிர களப் புலனாய்வில் இறங்கியுள்ளது.

இத்துப்பாக்கிச்சூட்டில் மொன்றியல் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியான முகமது லமின் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) மற்றும் 68 வயதான பொதுமகன் மிஷெல் மிஸ்ராஹி (Michel Mizrahi) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கொலையாளியும் அந்த இடத்திலேயே
காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை வைத்துள்ள பொதுமக்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு, BEI அமைப்பின் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 22-ஆம் திகதி நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் உண்மைப் பின்னணியைக் கண்டறியும் நோக்கில், BEI அமைப்பின் புலனாய்வாளர்கள் இன்று அவென்யூ டி கோர்ட்ராய் (Avenue de Courtrai) மற்றும் டெகாரி கூட்டிணைவுச் சாலை (Décarie Boulevard) சந்திப்பில் ஒரு நடமாடும் கட்டளை மையத்தை அமைத்தனர்.

இன்று காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்தப் புலனாய்வாளர்கள் அங்கிருந்து விசாரணையை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினரின் துரித நடவடிக்கை மற்றும் துப்பாக்கிச்சூடு பரிமாற்றம் நிகழ்ந்த விதம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் – உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு
அடுத்த செய்தி நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் – ஜெர்மனி நிறுவனத்தை முதன்மைத் தேர்வாக முடிவு செய்தது கனேடிய மத்திய அரசு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

ஜூலை 30, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் உட்புறப் பகுதிகளைத் தரம் உயர்த்த, கியூபெக் அமைச்சரவை ஒப்புதல்

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தங்கத்தின் விலை உயர்வு

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பதில் பிரதம நீதியரசர் பதவியேற்ப்பு!

நவம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?