Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

புதிய அணுசக்தி மூலோபாயத்தை அறிவித்துள்ளார் அமைச்சர் டிம் ஹாட்ஜ்சன்

ஜூலை 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் இயற்கை வளங்கள் அமைச்சர் Tim Hodgson, நாட்டின் அணுசக்தி உற்பத்தித் திறனை பெருமளவில் விரிவுபடுத்தும் நோக்கில் கூட்டாட்சி அரசாங்கத்தின் புதிய அணுசக்தி மூலோபாயத்தை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் போது, இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிகப்பெரிய அணுமின் நிலையத் திட்டங்களை, குறிப்பாக அரசும் தனியார் முதலீட்டாளர்களும் இணைந்து செயல்படுத்தும் மாதிரியை, கனடாவுக்கான முன்மாதிரியாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய மூலோபாயத்தின் முக்கிய இலக்கு, 2050ஆம் ஆண்டுக்குள் கனடாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தித் துறையை வலுப்படுத்துவதும், நாட்டின் மின்வலையமைப்பை விரிவுபடுத்துவதுமாகும். இதற்காக 10 புதிய பெரிய அளவிலான அணு உலைகளை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் 2035ஆம் ஆண்டுக்குள் குறைந்தது இரண்டு புதிய அணு உலைகளின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும், 2040ஆம் ஆண்டுக்குள் மேலும் ஐந்து திட்டங்களை திட்டமிடல் அல்லது மேம்பாட்டு நிலையில் கொண்டு வரவும் அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் ஹாட்ஜ்சன் கூறுகையில்,

உலகளவில் மின்சாரத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), தரவு மையங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தொடர்ந்து, நம்பகமான மற்றும் குறைந்த கார்பன் வெளியீடு கொண்ட மின்சாரம் அவசியமாகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்வதில் அணுசக்தி முக்கிய பங்காற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி
அடுத்த செய்தி தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா

செப்டம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
கியூபெக்முதன்மை செய்தி

அதிகரித்துள்ள பெட்ரோல் விலையிலிருந்து நிவாரணம் வழங்க உடனடித் திட்டங்களை வகுக்குமாறு புதிய முதல்வர் உத்தரவு

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?