உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தேர்தல் வெளிப்படைத்தன்மையில் சர்வதேச அளவில் முன்னணி நாடாகத் திகழ்கிறது என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேர்தல் செயல்பாடுகள் அனைத்தும் உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார்,
ஸ்ரீநகர் மற்றும் பட்காம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் களப் பணியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியத் தேர்தல் முறையின் சிறப்புகள் குறித்தும், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்தும் விளக்கியுள்ளார்.
மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான சர்வதேச அமைப்பான International Institute for Democracy and Electoral Assistance அமைப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா தற்போது வகித்து வருவதாக கியானேஷ் குமார் சுட்டிக்காட்டினார்.
இந்த அமைப்பில் மொத்தம் 35 உறுப்பு நாடுகளும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


