கல்பிட்டியவிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடுவதுடன், குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இதனையடுத்து, கடற்றொழிலில் ஈடுபடுவோர் மற்றும் கடலுக்குச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


