மத்திய அரசியல் கட்சிகளில் ஒன்றான ‘கனடா பசுமைக் கட்சி’ (Green Party of Canada), தனக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வத் தேர்தல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த கட்சியின் தற்போதைய தலைவரான எலிசபெத் மே பதவியிலிருந்து முழுமையாக விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தனி நபராகவோ அல்லது இருவர் இணைந்து ‘இணைத் தலைவர்கள்’ (Co-leaders) என்ற அடிப்படையிலோ, போட்டியிட அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரவலாக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் கூட்டு அரசியலை (Collaborative politics) ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய நடைமுறையின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ‘கனடா பசுமைக் கட்சி’ தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


