Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அதீத வேகமாகக் கார் ஓட்டிய இளைஞர் கைது

ஜூன் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில், அதீத வேகத்தில் காரை ஓட்டி, வீதிப் பாதுகாப்பு  விதிகளுக்குப் பெரும் இடையூறாக விளங்கிய 23 வயது இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் சாட்டவுக் (Châteauguay) பிராந்தியத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

நெடுஞ்சாலை 20 மேற்கில் (Highway 20 West) மணிக்கு 70 கி.மீ மட்டுமே செல்லக்கூடிய கட்டுப்பாட்டுப் பகுதியில், அந்த இளைஞர் மணிக்கு 217 கி.மீ வேகத்தில் காரைச் செலுத்தியுள்ளார். இது அனுமதிக்கப்பட்ட வேக எல்லையை விட 140 கி.மீ க்கும் அதிகமாகும். அந்த இளைஞரின் வாகனைத்தைத் துரத்திக் கைப்பற்றிய இந்தச் செயற்பாட்டில், கியூபெக் மாகாணப் பொலிஸாருடன் கானவாகே பழங்குடியினப் பாதுகாப்புப் படையினரும் பங்கேற்றுள்ளனர்.

இறுதியாகப் பொலிஸ் வாகனத்தின் மீது சந்தேக நபரின் கார் மோதி உருக்குலைந்ததுடன், துரத்தும் நடவடிக்கை நிறைவடைந்தது. இந்த அதிவேகப் பின்தொடர்தல் மற்றும் மோதலில் யாருக்கும் எவ்வித உடல் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 23 வயது இளைஞனின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக 7 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வாகனம் 30 நாட்களுக்குப் பொலிஸாரால் பறிமுதல் (Impounded) செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை, பொலிஸாரின் கடமைக்கு முட்டுக்கட்டையிட்டுத் தப்பியோட முயன்றமை மற்றும் பொலிஸ் வாகனத்தை மோதியமை (Armed assault) உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி பிலிப்பைன்ஸில் நில அதிர்வு – 32 பேர் பலி
அடுத்த செய்தி கியூபெக் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் ஆளும் கட்சிக்கு சிக்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரும் பிணையில் விடுதலை

பிப்ரவரி 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு- உடனடியாக வங்கிக் கணக்கிகளை திறக்குமாறு அறிவுறுத்த

அக்டோபர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பேசாலை பங்கைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் – ஊரவர்கள் குற்றச்சாட்டு

மே 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?