பிலிப்பைன்ஸ் மின்டோனோ தீவில் 7.7 ரிக்டர் அளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதுடன் கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வதிர்வினால் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 114 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பிலிப்பைன்ஸுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
