Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடிக்கு ஜனாதிபதி ஹிஸ்புல்லாவா?” – 3 உறுப்பினர்கள் சாடல்.

ஜூன் 4, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளை பார்க்கும் போது காத்தான்குடிக்கு ஜனாதிபதி சிறிலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? நகரசபை இலங்கை திரு நாட்டிற்குள் உள்ளதா? ஜனநாயகம் முறையாக பேணப்படுகின்றதா? என  நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்களான ஏ.எம்.ஏ. பர்சாத்,  எம்.எப்.எம். கலீல் பாரி, ஜுனைட் முஜீப் ஆகியோர் ஒன்றினைந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர்  நல்லாட்சிக்கான தேசிய மக்கள் முன்னணி ஏ.எம்.ஏ. பர்சாத்,  சுயேச்சைக் குழு உறுப்பினர் எம்.எப்.எம். கலீல் பாரி, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜுனைட் முஜீப் ஆகியோர் ஒன்றினைந்து இவ்வாறு தெரிவித்தனர்.

சுற்றுலா துறை அமைச்சினால் 4 மில்லியன் ரூபா பெறுமதியான 4 சுற்றுலாத்துறை படகுகளை வழங்கினார் அது வருமானத்தை அதிகரிப்பதற்காக இருந்த போதும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விஷயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை அந்த படகை செலுத்தும் சாரதி உண்மையில் நீச்சல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அதேபோன்று அனுமதிகள் சரியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை சட்ட ஒழுங்கு பேணப்படவில்லை முறையான அனுமதிகள் வழங்கப்படுவதில்லை

எதிர்கட்சி வேறு ஆளும்கட்சி வேறு என பிரித்து அங்கு வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றதுடன் முறையற்ற விதத்தில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்

அண்மையில் சுற்றுலா துறை அமைச்சினால் படகு ஒன்று வழங்கப்பட்டு சேவையில் இடப்பட்டது ஆனால் நகர சபை உறுப்பினர்களுக்கு உத்தியோக பூர்வமாக  அழைப்பிதழ் வரவில்லை அதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் எந்தவிதமான அனுமதியையும் வழங்கவில்லை இவ்வாறு எந்தவிதமான அனுமதியையும் பெறாது சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றனர்.

மண்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற இருந்த அந்த கூட்டத்திற்கு நகர சபையில் அங்கம் வகிக்கும் எதிர்கட்சியான 3 கட்சிகளைச் சேர்ந்த எங்களுக்கு எந்த விதமான அழைப்பம் கிடைக்கவில்லை

இது தொடர்பாக பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டபோது புதிய சுற்று நிருபத்தின் படி நகரசபை தவிசாளர் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து தருமாறு நகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் நகரசபை தவிசாளர் முரணாக எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை காரணம் மத்திய கல்லூரி மைதானம் தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் பல முறைப்பாடுகளை செய்திருந்தனர் இது தொடர்பாக நாங்கள் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாட இருந்தோம் இதை அறிந்த  எங்களை இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை  இது ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு. .

நகரசபை அமர்வில் பேசப்படும் விஷயம் ஒன்று அதன் கூட்டு அறிக்கையில் வேறு  ஒன்று வருகிறது குறிப்பாக மத்திய கல்லூரி சுவர் இடிப்பு விஷயம் நகரசபையின் 27 அபிவிருத்தி திட்டத்தில் ஒன்று மத்திய கல்லூரியின் தேவையான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் என சபை அமர்வில் தவிசாளர் அனுமதியை கேட்டார் அதற்கான அனுமதியை நாங்கள் வழங்கினோம்

ஆனால் அடுத்து சபை அமர்வில் அந்த கூட்டறிக்கையில் முழுக்க முழுக்க மாற்றப்பட்டு அந்த  கல்லூரியின் மைதான சுவரை உடைத்து  அங்கு வாகன தரிப்பிடம் அமைப்பது என முழுக்க மாற்றப்பட்டுள்ளது இது தொடர்பாக கண்டறிந்து சபையில் பேசிய போது அதனை தவிசாளர்   ஏற்றுக் கொண்டார் அதன் பின் மூன்று சபைகள் நடந்து முடிந்தும் அதனை இன்னமும் கூட்டறிக்கையில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

அதேவேளை இந்த படகு சேவையில் ஒரு சிறிய விபத்து இடம்பெற்றது இதில் 30 பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர் இருந்தபோதும் ஏதாவது ஒன்று நடந்திருந்தால் அதற்கு நகரசபை உறுப்பினர்களாக நாங்களும் பதில் சொல்லி இருக்க வேண்டும்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எனக்கும் சுயேச்சைக் குழு உறுப்பினருக்கும் எதிராக தவிசாளர் மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக முகநூலில் பதிவிட்டதால் நகரசபைக்கான வருமானம் குறைந்து விட்டதாக ஒரு கண்டன தீர்மானத்தை கொண்டுந்தார் எனவே மக்களின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது நகர சபையின் வருமானம் முக்கியமா?

காத்தான்குடி ஜாமில் உல்லா வீதி கிட்டத்தட்ட 20 வருடங்களாக மிகவும் மோசமாக உள்ளது இதனை தனியார் நிதியை கொண்டு செயல்படுத்துவோம் என ஒரு பிரேரணையை முன்வைத்தேன் அதை வாங்க மறுத்துவிட்டார்.

இவ்வாறு தவிசாளர்  தொடர்ச்சியாக சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருகின்றனர் எனவே இலங்கை நாட்டுக்கு ஒரு சட்டம் காத்தான்குடிக்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவே இது எனவே இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும்  உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி ஆட்சி மாறினாலும் இனவாத அரசியல் தொடர்கிறது – பா.உ.சிறீதரன் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் போலி உருவங்களைக் காட்டி இணைய வழி நிதி மோசடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பு ரயிலில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

செப்டம்பர் 20, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மு.க.ஸ்டாலினை சந்தித்த ஜீவன் தொண்டமான்.

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த நபர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?