Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடா, முதலான 60 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்கிறது அமெரிக்கா

ஜூன் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் (Supply Chains) கட்டாய உழைப்பு
(Forced Labour) மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறியே, இந்த இறக்குமதி வரிகள் புதிதாக விதிக்கப்படவுள்ளன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) இவ்விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் அதிபர் டிரம்பின் பொதுவான உலகளாவிய இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக இந்த புதிய வரி விதிப்பு உத்தியை வெள்ளை மாளிகை கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளியான கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) வொஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து, உரையாடிய சில மணித்தியாலங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ”கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுப்பதற்கு, தமது மிக முக்கியமான வர்த்தகப் பங்காளர்கள், தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. எனினும், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு இதிலிருந்து விதிவிலக்குஅளிக்கப்படும் என்பதால், கனடாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 90 சதவீதப் பொருட்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மத்திய அரசின் தலையீட்டை எதிர்க்கும் கியூபெக் மற்றும் அல்பர்ட்டா
அடுத்த செய்தி கியூபெக்கினை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசுடன் 1,000 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை எட்டியுள்ள கனேடிய மத்திய அரசு

மார்ச் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சி – சிவசக்தி ஆனந்தன்

ஏப்ரல் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மல்லெஹெவவில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்!

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3 ஆம் தவணை கல்வி நடவடிக்கை தொடர்பான முக்கியத் தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?