மொன்றியல் வடக்கு (Montreal-North) பிராந்தியத்தில் உள்ள வணிக வளாகத்திற்குள் இடம்பெற்ற வன்முறை மோதல் குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலை நடத்திய ஆயுதக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
ஒரு குழுவினருக்கும் பாதிக்கப்பட்ட இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே, பின்னர் வன்முறையாக மாறியுள்ளதெனத் தெரிய வருகின்றது.
இதன்போது அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் (Sharp object) அந்த இளைஞனின் உடலின் மேல் பகுதியில் (Upper body) சரமாரியாகக் குத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான இளைஞர் சுயநினைவிழந்த நிலையில், சுவாசக் குறைபாடுகளுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதுவரை இக்கொடூரத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
