நிதி நெருக்கடியில் தவித்து வரும் மொன்றியல் பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை முடக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், கியூபெக் மாகாண அரசாங்கம் 561 மில்லியன் டொலர்களை அவசர நிதியுதவியாக வழங்க முன்வந்துள்ளது.
மாகாணப் போக்குவரத்து அமைச்சர் ஜெனீவீவ் கில்போல்ட் (Geneviève Guilbault) இந்த அதிரடி நிதியொதுக்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலப்பகுதியில் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி மற்றும் அதிகரித்த இயக்கச் செலவுகள் காரணமாக, மொன்றியல் போக்குவரத்து அமைப்புகள் கடுமையான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை (Budget deficit) எதிர்கொண்டு வந்த நிலையிலேயே இந்த
முடிவு எட்டப்பட்டுள்ளது.
மொன்றியல் பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தடையுமின்றி தடையின்றி இயக்குவதை உறுதி செய்யும் நோக்கிலேயே, இந்த அவசர நிதியுதவி
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
