Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கனடாவின் ஸ்னோபேர்ட்ஸ் விமானக் காட்சிகள் நிறுத்தப்படுமா?

மே 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் புகழ்பெற்ற வானூர்தி சாகச அணியான Canadian Forces Snowbirds, 2026 ஆம் ஆண்டின் விமானக் காட்சி பருவத்திற்குப் பிறகு தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக கனடிய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது பயன்படுத்தப்படும் CT-114 Tutor ஜெட் விமானங்கள் சேவைக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு முதல் ஸ்னோபேர்ட்ஸ் அணியின் அடையாளமாக விளங்கிய CT-114 Tutor விமானங்கள், 1960களில் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும் . ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டுள்ள இந்த விமானங்களை பாதுகாப்பு காரணங்களால் ஓய்வுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ராயல் கனடியன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் David McGuinty அறிவித்ததன்படி, 2026 பருவம் ஸ்னோபேர்ட்ஸ் அணியின் தற்போதைய விமானங்களுடனான கடைசி நிகழ்ச்சி பருவமாக இருக்கும் எனவும் அதன் பின்னர் புதிய CT-157 Siskin II விமானங்கள் பெறப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் வரை, 2030களின் தொடக்கம் வரை அணியின் விமானக் காட்சிகள் இடைநிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக, ஸ்னோபேர்ட்ஸ் அணியின் முன்னாள் விமானிகள் மற்றும் முன்னாள் கட்டளை அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள், அணியை முழுமையாக நிறுத்துவதற்குப் பதிலாக குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களுடன் அல்லது குறைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து செயல்படுத்தும் மாற்று வழிகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த அணியின் நிகழ்ச்சிகள் கனடிய ஆயுதப்படைகளுக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதிலும், நாட்டின் விமானப்படை மரபை வெளிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக எதிர்க்கட்சியினர் மற்றும் விமான ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஸ்னோபேர்ட்ஸ் அணி இதுவரை ஆயிரக்கணக்கான வானூர்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வட அமெரிக்கா முழுவதும் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 55வது ஆண்டு நினைவு பருவம், தற்போதைய Tutor விமானங்களுக்கான பிரியாவிடை பருவமாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனவரி 14, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றினால் மோதல் ஏற்படும்….

மே 27, 2025
கனடாமுதன்மை செய்தி

லீஃப் ராப்பிட்ஸ் நகர மக்கள் அவசர வெளியேற்றத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுப்பு .

ஜூலை 7, 2025
உலகம்முதன்மை செய்தி

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த தென் கொரியா….

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?