Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர்

மே 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில், புதிதாக அமையப்பெற்று வரும் மாநகர சபை கட்டடத்திற்கு அருகில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க சாதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சர்ச்சைக்குரிய ஆதனத்தை ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

குறித்த ஆதனமானது யாழ். மாநகர சபைக்கு உரித்தானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நில அளவைத் திணைக்கள வரைபடங்கள் என்பன தம்மிடம் உள்ளமை தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் இதன்போது ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினர்.

ஆயினும், குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சோலை வரியும் அறவிடப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

விடயங்களை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், குறித்த ஆதனம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான பெயர்மாற்றம் மற்றும் வரி அறவீட்டு விடயங்களைக் கையாண்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், முறையற்ற விதத்தில் தனிநபர் வசமாகியுள்ள குறித்த ஆதனத்தை மீள மாநகர சபைக்கு மீட்டெடுப்பதற்காகத் துரிதமாக நீதிமன்றப் பொறிமுறைகளை நாடுமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த விசேட கள ஆய்வின்போது, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர், உரிய பிரிவின் கிராம அலுவலர் மற்றும் காணி அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

முந்தைய செய்தி வடக்கில் ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ அறிமுகம்
அடுத்த செய்தி சித்தாண்டியில் தனியார் பேருந்துடன் லொறி மோதி விபத்து – 5 பேர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

ஜூன் 27, 2025
இலங்கை

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்!

ஜூன் 14, 2025
1
இலங்கை

கிளிநொச்சி குளத்தின் கீழ் சுற்றுலா மையம் ஆளுநரால் திறந்து வைப்பு.

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பருவப்பெயர்ச்சி வானிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

மே 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?