Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பிப்ரவரி 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம்.

இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும். எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும்.

மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளளார்.

டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம். ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம்.

மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம். திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம். இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை.

இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக பாராளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம்.

மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை. கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர்.

முந்தைய செய்தி யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு
அடுத்த செய்தி யாழில். பனை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பை மேற்கொண்ட பிரதி அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை!

அக்டோபர் 3, 2025
இலங்கை

மக்களின் மனதில் மாற்றம் வேண்டும் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மேற்கொள்ளவுள்ள மீள்குடியேற்றத்திற்க்கான கலந்துரையாடல்!

ஜூன் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விளக்கமறியலில்…

ஏப்ரல் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?