Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

கோவை சிறுமி கொலை வழக்கு

மே 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் முதலமைச்சர் விஜய் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன் மற்றும் சம்பத் குமார் ஆகியோர் நேரில் சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாரண காசோலையையும் வழங்கியுள்ளனர்.

முந்தைய செய்தி வட அமெரிக்க பாதுகாப்பில் கனடா மீது பென்டகன் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி சீன நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து – 80 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

மக்காவில் பேருந்து விபத்து – 42 இந்தியர்கள் உயிரிழப்பு

நவம்பர் 17, 2025
இந்தியா

ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி

ஆகஸ்ட் 14, 2026
இந்தியா

அநாதரவாக நின்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்

டிசம்பர் 13, 2025
இந்தியா

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் பிரகாசிக்கும் இந்திய பொருளாதாரம்: பிரதமர் மோடி

ஆகஸ்ட் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?